Saturday, March 22, 2014

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: பி.எட்., மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட், மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதத்தில் B.Ed., B.Ed(Se) ஆகிய படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிட்டன. தேர்வு முடிவுகளில் சந்தேகம் கோரி விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை அறிய www.tnou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Monday, March 3, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் பணி நியமனம் வழங்கக் கோரி சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு தேர்வர்கள் கோரிக்கை மனுவுடன் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கூறியது:
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி நியமனங்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்படுவதில்லை.

தமிழ்நாடு பாடநூல் கழகம் பெயர் மாற்றம்



தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பெயர் 'தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள்  கழகம் " என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது.

இக்னோ பல்கலை பி.எட். தேர்வு முடிவு வெளியீடு

மத்திய அரசு பல்கலைக் கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல் கலைக்கழகத்தின் (இக்னோ) தொலைதூரக் கல்வி பி.எட். தேர்வு (டேர்ம் எண்ட் எக்ஸாம்) கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவை இக்னோ வெளியிட்டுள் ளது. பல்கலைக்கழக இணையதளத்தில் (www.ignou.ac.in) மாணவர்கள் தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.

Tuesday, December 24, 2013

பாரதிதாசன் பல்கலை: பி.ட்., எம்.எட், தேர்வு முடிவுகள் வெளியீடு

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், பி.ட்., எம்.எட், படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதத்தில் பி.ட்., எம்.எட், படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை அறிய www.bdu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Sunday, December 1, 2013

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்படும் பி.எட். 2014-ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை வருகிற 31-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி இயக்கக இயக்குனர் (பொறுப்பு) பாஸ்கரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்படும் இளங்கல்வியியல் (பி.எட்.) 2014-ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை தமிழ்ப்பல்கலைக்கழக வாகை வளாகம் மற்றும் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் மன்னர் சரபோஜி கல்லூரி எதிரில் புதிய வீட்டுவசதி வாரியம் குறிஞ்சி நகர் தகவல் மற்றும் சேர்க்கை மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த விண்ணப்பங்கள் விற்பனை வருகிற 31-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. விண்ணப்பங்களை கல்வி மற்றும் தகவல் மையங்களில் பெறலாம். கல்வி மற்றும் தகவல் மைய முகவரி மற்றும் பிற விவரங்களுக்கு இணையதளத்தில் பார்க்கலாம். பிற பாடங்களான இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ், தொழிற்முறை படிப்புகளுக்கான 2013-14 கல்வியாண்டு சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.